Posts

இரத்த சோகை போக்க...! உடல் பருமனை குறைக்கும் தக்காளி...!

Image
இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும் , இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் உடலில் இருந்தாலும் அவற்றை வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காளிச் சாறு. நன்கு பழுத்த தக்காளிப் பழத்தை சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும். பழுத்த பழத்தில்தான் நோய்த் தடுப்பு வைட்டமின் ‘ சி ’ அதிகமாய் இருக்கிறது. சிறு நீர் எரிச்சல் , மேக நோய் , உடலில் வீக்கம் , உடல் பருமன் , நீரிழிவு , குடல் கோளாறுகள் , கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது. மேலும் இந்த வித நோய் உள்ளவர்கள் 5,6 பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் சாறாக மாற்றி அருந்தினால் போதும், நாக்கு வறட்சியும் அகலும், உடலும் மினுமினுப்பாய் இருக்கும். மேலும் 100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும் கலோரி 20 தான். எனவே எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது. பழத்தில் கால்சியம் , பாஸ்பரஸ் , வைட்டமின் ‘ சி ’, வைட்டமின் ‘ ஏ ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்குச் சத்துணவும் கிடைக்கும். ...

வெயில் தாக்குதலில் உடலை காக்க இளநீர் சாப்பிடுங்க....!

Image
இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இருதயம் , கல்லீரல் , சிறுநீரகம் , கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோயாளிகள் , நாட்பட்டசீதபேதி , ரத்த பேதி , கருப்பை ரணம் , குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை , உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது. பேதி , மயக்கம் , அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது 1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும். நீர்க்கடுப்பு மே , ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும். சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல் , கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர , 5 நாளில் அவை நீங்கும். உடம...

இயற்கை மருத்துவம்

சீத்தாப் பழத்தில் மறைந்துள்ள மருத்துவ நன்மைகள் - இயற்கை மருத்துவம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பழங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்திருக்கும். சீத்தாப்பழம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், அதனுள் உள்ள தசைப்பகுதி மிகவும் அருமையான சுவையில் இருக்கும். மேலும் இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. இப்பழத்தை அப்படிய ...

வள்ளலாரின் அறிவுரைகள்

1. நல்லோர் மனதை நடுங்க வைக்காதே. 2. ஏழைகள் வயிறை எரியச் செய்யாதே. 3. வலிய தலையிட்டு மானம் கெடுக்காதே. 4. தானம் கொடுப்போரைத் தடுக்காதே. 5. மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் இழைக்காதே. 6. பசித்தோர் முகத்தைப் பாராதிருக்காதே. 7. குருவை வணங்கக் கூசி நிற்காதே. 8. கோள் சொல்லி குடும்பம் கலைக்காதே. 9. தந்தை தாய் பேச்சைத் தட்டி நடக்காதே. 10. தவம் செய்தோரைத் தாழ்த்திப் பேசாதே.

சித்த மருத்துவ அடிப்படைகள்:-

Image
சித்த மருத்துவ அடிப்படைகள்:- இந்த அடிப்படையை தெரிந்துக்கொண்டால் சித்த மருத்துவத்தில் மற்றவைகள் எளிதில் விளங்கும். 1 அவுன்சு : 30 மில்லி லிட்டர் 1/4 ரூபாய் எடை : சுமார் 3 கிராம். 1 குன்றி எடை : 200 மி.கி. 1 ரூபாய் எடை : 10 கிராம் இலைக் கற்கம் : இலையுடன் நீர் விட்டு அரைத்த பசை. சமூலம் : வேர், இலை, பூ, காய் போன்ற அனைத்தும் சேர்ந்தது. சூரணம் : நன்றாக தூள் செய்து, ஒரு மெல்லிய துணியால் சலித்து எடுத்த பொடி. பற்பம் : மருந்து சரக்கை ஓடுகளில் வைத்து ஈர மண் தடவிய சுற்றி வரட்டி வைத்து புடமிட்டு செய்த பொடி. ( ஆயுட் காலம் : 100 ஆண்டுகள்) இந்த முறை தான் புடம் எனப்படும். கியாழம் : சேர்க்க வேண்டிய பொருட்களுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் ஏற்றி காய்ச்சி மூன்றில் ஒரு பங்காக குறைத்து வடிக்கட்டி எடுத்தது. கல்வம் : மருந்து அரைக்கும் கல். ( இதில் நன்னி கல் தான் சிறந்தது என்று அகத்தியர் சொல்லி இருக்கார்.) சுத்திசெய்தல் : மருந்துகளில் உள்ள நச்சுகளை நீக்குதல், மருந்துகளை சுத்தம் செய்தல், தரமான மருந்துகளை எடுத்தல் இதற்கு சுத்திகரணம் என்றும் பெயர். மேலும் பயணிப்போம் . .

புலிக்கால் முனிவர்

காலத்திலேயே மிகவும் சீரும் சிறப்புமாக திகழ்ந்த சிவாலயங்கள் பல சென்னையில் உள்ளன. அவற்றுள் ஒன்று வடபழனியில் உள்ள ஸ்ரீவேங்கீஸ்வரர் ஆலயம். புலிக்கால் முனிவர், பதஞ்சலி முனிவர் எனும் இரு முனிவர்களால் உருவாக்கப்பட்டு, தினமும் ஆராதிக்கப்பட்ட தொன்மை சிறப ்பு வாய்ந்த தலம் என்ற பெருமை இத்தலத்துக்கு உண்டு. இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஈசன், இந்த முனிவர்களோடு தொடர்பு கொண்டதால், அந்த முனிவர்களின் பெயராலே அழைக்கப்படுகிறார். இதன் பின்னணியில் உள்ள புராண சம்பவம் வருமாறு:- புராணக்காலத்தில் மத்தியந்தினர் என்று ஒரு முனிவர் இருந்தார். இவரது மகன் புலிக்கால் முனிவர். இவருக்கு வியாக்ரபாதர் என்றொரு பெயரும் உண்டு. இவர் புலி போன்ற உடல் அமைப்பைக் கொண்டவர். இதனால் மரங்களில் ஏறி எளிதாக பூக்களை பறித்து வந்து, இறைவனுக்கு அர்ப்பணித்து வணங்கி வந்தார். சென்னை மண்டலத்தில் இவர் வசித்த பகுதி புலியூர் ஆனது. அந்த பகுதியில் சிறு ஆசிரமம் ஒன்றை புலிக்கால் முனிவர் நிறுவினார். ஆசிரமத்துக்குள் சிறு லிங்கம் ஒன்றை நிறுவி வணங்கி வந்தார். அந்த லிங்கத்துக்கு புலியூருடையார் என்று பெயர் சூட்டப்பட்டது. புலியூரை வி...

சிவபுராணம்

சிவபுராணம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில், நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகமம் ஆகிநின்று, அண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன், இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட, வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன், பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன், பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும், கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்கும், சீரோன் கழல்வெல்க ஈசன் அடிபோற்றி, எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி, சிவன் சேவடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும், மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறை, நம் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம், அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள், நின்ற அதனால் அவன் அருளாலே, அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை முந்தை வினை முழுதும், ஓய உரைப்பன்யான் கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி விண்நிறைந்து மண்நிறைந்து, மிக்காய், விளங்கொளியாய் எண்இறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன், புகழுமாறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவ...

கறிவேப்பிலையைக் கொண்டு உடல்நல பிரச்சனைகளுக்குத் தீர்வு

Image
அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. பலரும் கறிவேப்பிலை வெறும் சுவை மற்றும் மணத்திற்காகத் தான் சேர்க்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் அது தவறு. கறிவேப்பிலையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக தூக்கி எறியும் அந்த இலையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் சத்துக்கள் உள்ளது உங்களுக்கு அன்றாடம் உடலுக்கு வேண்டிய சத்துக்களைப் பெற வேண்டுமானால், உணவில் சேர் க்கும் கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தாலே போதும். ஏனெனில் கறிவேப்பிலையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் வைட்டமின்களான ஏ, ஈ, சி மற்றும் பி போன்றவை நிறைந்துள்ளது. பலருக்கும் கறிவேப்பிலை சாப்பிட்டால் முடி வளரும் என்று தான் தெரியும். ஆனால் கறிவேப்பிலையைக் கொண்டு பல பெரிய பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காணலாம். அசிடிட்டி :- அசிடிட்டி பிரச்சனை இருந்தால், கறிவேப்பிலை சாற்றினைப் பருக அசிடிட்டி மற்றும் செரிமான பிரச்சனைகள் தீரும். அதற்கு கறிவேப்பிலையை ஜூஸ் போட்டு குடிக்க வேண்டிய அவசியமில்லை. தினமும் அதனை சிறிது வாயில் போட்டு மென்று சாப்பிட்டாலே போதும். வயிற்று உப்ப...

நட்சத்திர நாட்களின் பயன்கள் :

Image
சில நட்சத்திர நாட்கள் அன்று நாம் செய்யும் சில நல்ல செயல்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது ... • திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில் விஷ்ணுவை துளசி மாலை போட்டு துவரம் பருப்பு பாயசத்தினால் நிவேதனம் செய்து அதை தானம் செய்து வர நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். • திருவாதிரை அன்று சிவனை வணங்கி விட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால், பல வருடங்களாக தீராத நோயும் எளிதில் குணமாகும். • ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட வறுமை நீங்க சுபிட்சம் பெறலாம். • பிறரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மிருகசீஷ நட்சத்திரத்தில் முருகரை வழிபட்டு பின் சென்று கேட்டால் கட்டாயம் கிடைக்கும். • விசாக நட்சத்த்திரத்தில் மனைவியானவர் விரதமிருந்து முருகரையும்,வள்ளி யையும் வழிபட கணவரின் அனுசரணையும் அன்பும் பெருகும்.திருமணமாகாத பெண்கள்,நல்ல கணவன் அமையவும் இப்படி செய்யலாம் • நீண்ட கால நோய்களுக்கு பரிகாரம், மரண பயத்திற்கு பரிகாரம், மற்றும் ரகசிய ஒப்பந்தங்களில் ஈடுபட, கேட்டை நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கலாம். • எதிரிகளை வெற்றி கொள்ள, ஏவல், பேய், பில்லி சூனியன்களில் இருந்து வி...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பல ரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும்  சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்." (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ). (2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு ...

மதுரை மீனாஷி அம்மன் கோயில்

Image
மதுரை மீனாஷி அம்மன் கோயில்  ஓசோன் படலம் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் முதல்முதலில் அறிந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதற்கான ஆதாரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள, 700 ஆண்டுகளுக்கு முந்தைய பூகோள சக்கரத்தில் உள்ளது. அந்த சக்கரத்தில், ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதை பாதுகாப்பதற்கான வழிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓசோன் படலம் பற்றி 700 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா அறிந்திருந்தது. இதனை அறி ந்துகொள்வதற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பூகோள சக்கரத்தை பாருங்கள் என்று பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் கூறினர். பூமிக்கு மேலே 15 கி.மீ. முதல் 30 கி.மீ. உயரத்தில், இயற்கையாகவே ஓசோன் படலம் அமைந்துள்ளது. சூரியன் உமிழும், உடலுக்கு தீங்கான புற ஊதாக்கதிர்கள், பூமியைத் தாக்காதவாறு அந்த படலம்தான் பூமியை பாதுகாக்கிறது. ஆனால், காற்றில் கலந்து வரும் நச்சு வாயுக்களால், ஓசோன் படலம் சமீபகாலமாக சேதமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்கள் பூமியை அடைந்து மனிதர்களுக்கு தோல் புற்றுநோய், கண்புரை...

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்!

''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட  வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’ இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’  நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.  உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்து தான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.  நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவை தான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்...

நாவலன் தீவு என்று அழைக்கப்பட்ட குமரிக்கண்டம்

Image
உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இது தான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கி கொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்று ம் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் "குமரிக்கண்டம்". ஏழுதெங்க நாடு, ஏழு    மதுரை நாடு, ஏழு முன்பலைநாடு, ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பத்து ஒன்பது நாடுகள் இருந்துள்ளது. பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது. குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது. தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகர...

மலேசியாவை ஒட்டிய ஆழ்கடல்பகுதியில் சிவா,விஷ்ணு உருவ சிலைகள் கண்டு பிடிப்பு !

Image
மலேசியாவை ஒட்டிய ஆழ்கடல் பகுதியில் சிவா,விஷ்ணு உருவ கற்சிலைகள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.  சு மார் 2000 வருடங்களுக்கு முந்தயது   என செய்தி வெளியாகி இருக்கிறது.  சிலஆய்வாளர்கள் 6000 வருட    பழமையானதாக இருக்கலாம்   எனவும் சொல்கிறார்கள்.  லண்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள்    சோதனை செய்த பிறகு எத்தனை வருட  பழமையானது என்பதை உ று தி செய்துவிடுவார்கள்.  இதன் மூலம் ஆசியநாடுகள் முழுவதும்    2000 வருடங்களுக்கு மேலாக இந்து கோவில்    கட்டிவழிபாடுகள் செய்ததை உ று திசெய்ய    இந்த ஆராய்ச்சி முடிவு உதவும்.  ஏற்கனவே பல்லவர்கள், ராஜேந்திர சோழனின்  படையெடுப்புகள் , அந்த காலகட்டத்தில்    மலேசிய நாட்டின் கடாரம் பகுதியில் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் பல நம...

தென்ஆப்ரிக்கா டர்பனில் அம்பீலோ நதிக்கரையில் முதல் ஆலயம்

Image
தமிழர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று திரை கடலோடியும் திரவியம் தேடிடும் பண்பினர். இயற்கையையே ஆராதித்து வழிபடும் அற்புத உணர்வினர் என்பதால் ஆப்பிரிக்க மண்ணில் தடம் பதித்த நம்மக்கள் 1875-ல் டர்பனில் அம்பீலோ நதிக்கரையில் ஆடலழகனாம் அம்பலவாணருக்கு ஆலயம் அமைத்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் ஏற்பட்டவெள்ளம் ஆலயக் கட்டமைப்பைக் கொண்டுபோனது; எஞ்சிய சிறுபகுதி மண்ணில் புதையுண்டுள்ளது.  இருப்பினும் நதிக்க ரை முதல் ஆலயத்திலிருந்த வழிபாட்டு மூர்த்திகளை எடுத்து வந்து 1946-ல் புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் எழுந்தருளச்செய்து அருள்பாலிக்கச் செய்துள்ளனர். அவ்வாலயம் இரண்டாம் நதிக்கரை ஆலயமாக அம்பீலோ ஸ்ரீ அம்பலவாணர் ஆலயம் என்று விளங்கி வருகிறது. 1875-ல் நதிக்கரைஆலயம் முதன்முதலாக உருவாகியதன் அடிப்படையில் 1980-ல் தேசிய நினைவுச் சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதும் சிறப்பாகும். தற்போது 140 ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாட இருப்பது மகிழ்வளிக்கிறது. கடவுள் கொள்கையில் உறுதியுடைய நம் தமிழ் மக்கள் ஆப்பிரிக்க மண்ணில் நதிக்கரையில் எழும்பிய ஆலயங்களைச் சிறப்பிக்கின்ற வகையில், தயாராகி வருகின்ற ஆலய ...

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிற து . சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். 2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....? அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது. டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி...? அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்...

தமிழ் கற்போம்

A Ainthil Valayaathathu Aimbathil Valayumaa Tamil: ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா.  Literal: Which character or habit that you cannot change at 5 years old you won't be able to change at 50 years old. Meaning: You have to teach good skills to children at a young age. Arai koththarisi anna dhaanam. Vidiya vidiya maela thaalam. Tamil: அரை கொத்தரிசி அன்ன தானம். விடிய விடிய மேள தாளம். Literal: Half a handful of rice is given as charity, but the announcing drumming is done all night. Meaning: when you indulge in charity, do not announce it with trumpets - Aadath thireyathaval medaii konal enralaam Tamil: ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம். Literal: She who cannot dance says the stage is imperfect. Meaning: A bad workman blames his tools. Adi mel adi vaithal ammiyum nagarum Tamil: அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். Literal: If you keep hitting it, even the  ammi  will move. (Ammi is a large grind stone difficult to move from its posit...