தென்ஆப்ரிக்கா டர்பனில் அம்பீலோ நதிக்கரையில் முதல் ஆலயம்

தமிழர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று திரை கடலோடியும் திரவியம் தேடிடும் பண்பினர். இயற்கையையே ஆராதித்து வழிபடும் அற்புத உணர்வினர் என்பதால் ஆப்பிரிக்க மண்ணில் தடம் பதித்த நம்மக்கள் 1875-ல் டர்பனில் அம்பீலோ நதிக்கரையில் ஆடலழகனாம் அம்பலவாணருக்கு ஆலயம் அமைத்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் ஏற்பட்டவெள்ளம் ஆலயக் கட்டமைப்பைக் கொண்டுபோனது; எஞ்சிய சிறுபகுதி மண்ணில் புதையுண்டுள்ளது. இருப்பினும் நதிக்கரை முதல் ஆலயத்திலிருந்த வழிபாட்டு மூர்த்திகளை எடுத்து வந்து 1946-ல் புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் எழுந்தருளச்செய்து அருள்பாலிக்கச் செய்துள்ளனர். அவ்வாலயம் இரண்டாம் நதிக்கரை ஆலயமாக அம்பீலோ ஸ்ரீ அம்பலவாணர் ஆலயம் என்று விளங்கி வருகிறது. 1875-ல் நதிக்கரைஆலயம் முதன்முதலாக உருவாகியதன் அடிப்படையில் 1980-ல் தேசிய நினைவுச் சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதும் சிறப்பாகும். தற்போது 140 ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாட இருப்பது மகிழ்வளிக்கிறது. கடவுள் கொள்கையில் உறுதியுடைய நம் தமிழ் மக்கள் ஆப்பிரிக்க மண்ணில் நதிக்கரையில் எழும்பிய ஆலயங்களைச் சிறப்பிக்கின்ற வகையில், தயாராகி வருகின்ற ஆலய வரலாற்றுக் குறிப்பு நூல் தலைமுறைதோறும் நம்மக்களுக்கு இறை உணர்வின் சிறப்புகளை உணர்த்துவதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாலயத்திற்குச் செல்லும் பெண்கள் நீண்ட அங்கி அணிந்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog

புலிக்கால் முனிவர்

சித்த மருத்துவ அடிப்படைகள்:-

மதுரை மீனாஷி அம்மன் கோயில்