சித்த மருத்துவ அடிப்படைகள்:-

சித்த மருத்துவ அடிப்படைகள்:-
இந்த அடிப்படையை தெரிந்துக்கொண்டால் சித்த மருத்துவத்தில் மற்றவைகள் எளிதில் விளங்கும்.
1 அவுன்சு : 30 மில்லி லிட்டர்
1/4 ரூபாய் எடை : சுமார் 3 கிராம்.
1 குன்றி எடை : 200 மி.கி.
1 ரூபாய் எடை : 10 கிராம்
இலைக் கற்கம் : இலையுடன் நீர் விட்டு அரைத்த பசை.
சமூலம் : வேர், இலை, பூ, காய் போன்ற அனைத்தும் சேர்ந்தது.
சூரணம் : நன்றாக தூள் செய்து, ஒரு மெல்லிய துணியால் சலித்து எடுத்த பொடி.
பற்பம் : மருந்து சரக்கை ஓடுகளில் வைத்து ஈர மண் தடவிய சுற்றி வரட்டி வைத்து புடமிட்டு செய்த பொடி.
( ஆயுட் காலம் : 100 ஆண்டுகள்)
இந்த முறை தான் புடம் எனப்படும்.
கியாழம் : சேர்க்க வேண்டிய பொருட்களுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் ஏற்றி காய்ச்சி மூன்றில் ஒரு பங்காக குறைத்து வடிக்கட்டி எடுத்தது.
கல்வம் : மருந்து அரைக்கும் கல். ( இதில் நன்னி கல் தான் சிறந்தது என்று அகத்தியர் சொல்லி இருக்கார்.)
சுத்திசெய்தல் : மருந்துகளில் உள்ள நச்சுகளை நீக்குதல், மருந்துகளை சுத்தம் செய்தல், தரமான மருந்துகளை எடுத்தல் இதற்கு சுத்திகரணம் என்றும் பெயர்.
மேலும் பயணிப்போம் . .

Comments

Popular posts from this blog

புலிக்கால் முனிவர்

மதுரை மீனாஷி அம்மன் கோயில்