புலிக்கால் முனிவர்

காலத்திலேயே மிகவும் சீரும் சிறப்புமாக திகழ்ந்த சிவாலயங்கள் பல சென்னையில் உள்ளன. அவற்றுள் ஒன்று வடபழனியில் உள்ள ஸ்ரீவேங்கீஸ்வரர் ஆலயம்.

புலிக்கால் முனிவர், பதஞ்சலி முனிவர் எனும் இரு முனிவர்களால் உருவாக்கப்பட்டு, தினமும் ஆராதிக்கப்பட்ட தொன்மை சிறப
்பு வாய்ந்த தலம் என்ற பெருமை இத்தலத்துக்கு உண்டு. இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஈசன், இந்த முனிவர்களோடு தொடர்பு கொண்டதால், அந்த முனிவர்களின் பெயராலே அழைக்கப்படுகிறார்.

இதன் பின்னணியில் உள்ள புராண சம்பவம் வருமாறு:- புராணக்காலத்தில் மத்தியந்தினர் என்று ஒரு முனிவர் இருந்தார். இவரது மகன் புலிக்கால் முனிவர். இவருக்கு வியாக்ரபாதர் என்றொரு பெயரும் உண்டு. இவர் புலி போன்ற உடல் அமைப்பைக் கொண்டவர்.

இதனால் மரங்களில் ஏறி எளிதாக பூக்களை பறித்து வந்து, இறைவனுக்கு அர்ப்பணித்து வணங்கி வந்தார். சென்னை மண்டலத்தில் இவர் வசித்த பகுதி புலியூர் ஆனது. அந்த பகுதியில் சிறு ஆசிரமம் ஒன்றை புலிக்கால் முனிவர் நிறுவினார். ஆசிரமத்துக்குள் சிறு லிங்கம் ஒன்றை நிறுவி வணங்கி வந்தார்.

அந்த லிங்கத்துக்கு புலியூருடையார் என்று பெயர் சூட்டப்பட்டது. புலியூரை வியாக்ரபுரி என்று சொல்வார்கள். இதனால் இத்தலத்து ஈசனுக்கு வியாக்ரபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆனால் தற்போது இத்தலத்து ஈஸ்வரன், ஸ்ரீவேங்கீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? புலிக்கால் முனிவரின் பெயரில் உள்ள புலி என்ற சொல்லுக்கு வேங்கை என்றும் ஒரு அர்த்தம் உண்டு. அதன் அடிப்படையில் இத்தலத்து ஈஸ்வரன் ஸ்ரீவேங்கீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தகைய சிறப்புடைய இத்தலம் கோயம்பேடு நூறடி சாலையில் வடபழனி சிக்னல் அருகே அமைந்துள்ளது.

Comments

Popular posts from this blog

சித்த மருத்துவ அடிப்படைகள்:-

மதுரை மீனாஷி அம்மன் கோயில்