மதுரை மீனாஷி அம்மன் கோயில்

மதுரை மீனாஷி அம்மன் கோயில் ஓசோன் படலம் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் முதல்முதலில் அறிந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதற்கான ஆதாரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள, 700 ஆண்டுகளுக்கு முந்தைய பூகோள சக்கரத்தில் உள்ளது. அந்த சக்கரத்தில், ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதை பாதுகாப்பதற்கான வழிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓசோன் படலம் பற்றி 700 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா அறிந்திருந்தது. இதனை அறிந்துகொள்வதற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பூகோள சக்கரத்தை பாருங்கள் என்று பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் கூறினர். பூமிக்கு மேலே 15 கி.மீ. முதல் 30 கி.மீ. உயரத்தில், இயற்கையாகவே ஓசோன் படலம் அமைந்துள்ளது. சூரியன் உமிழும், உடலுக்கு தீங்கான புற ஊதாக்கதிர்கள், பூமியைத் தாக்காதவாறு அந்த படலம்தான் பூமியை பாதுகாக்கிறது. ஆனால், காற்றில் கலந்து வரும் நச்சு வாயுக்களால், ஓசோன் படலம் சமீபகாலமாக சேதமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்கள் பூமியை அடைந்து மனிதர்களுக்கு தோல் புற்றுநோய், கண்புரை நோய் போன்ற நோய்களை உருவாக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

புலிக்கால் முனிவர்

சித்த மருத்துவ அடிப்படைகள்:-