இரத்த சோகை போக்க...! உடல் பருமனை குறைக்கும் தக்காளி...!

இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் உடலில் இருந்தாலும் அவற்றை வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காளிச் சாறு. நன்கு பழுத்த தக்காளிப் பழத்தை சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும். பழுத்த பழத்தில்தான் நோய்த் தடுப்பு வைட்டமின் சிஅதிகமாய் இருக்கிறது. சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது. மேலும் இந்த வித நோய் உள்ளவர்கள் 5,6 பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் சாறாக மாற்றி அருந்தினால் போதும், நாக்கு வறட்சியும் அகலும், உடலும் மினுமினுப்பாய் இருக்கும். மேலும் 100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும் கலோரி 20 தான். எனவே எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது. பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி’, வைட்டமின் முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்குச் சத்துணவும் கிடைக்கும்.  உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் காலைப் பலகாரமாய் பழுத்த இரு தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டால் போதும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இப்படிச் சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுக்குள் வரும் எடையும் கூடாது. காரணம் அதில் மாவுச்சத்து குறைவாய் இருக்கிறது. அத்துடன் உடலுக்கு மேற்கண்ட தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகின்றன.இதனால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமைனக் குறைக்கலாம். தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் விரும்பிப் பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்துகிறது என்பது கூடுதல் தகவல்

Comments

Popular posts from this blog

புலிக்கால் முனிவர்

சித்த மருத்துவ அடிப்படைகள்:-

மதுரை மீனாஷி அம்மன் கோயில்