நட்சத்திர நாட்களின் பயன்கள் :

சில நட்சத்திர நாட்கள் அன்று நாம் செய்யும் சில நல்ல செயல்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது ...
• திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில் விஷ்ணுவை துளசி மாலை போட்டு துவரம் பருப்பு பாயசத்தினால் நிவேதனம் செய்து அதை தானம் செய்து வர நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.
• திருவாதிரை அன்று சிவனை வணங்கி விட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால், பல வருடங்களாக தீராத நோயும் எளிதில் குணமாகும்.
• ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட வறுமை நீங்க சுபிட்சம் பெறலாம்.
• பிறரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மிருகசீஷ நட்சத்திரத்தில் முருகரை வழிபட்டு பின் சென்று கேட்டால் கட்டாயம் கிடைக்கும்.
• விசாக நட்சத்த்திரத்தில் மனைவியானவர் விரதமிருந்து முருகரையும்,வள்ளி யையும் வழிபட கணவரின் அனுசரணையும் அன்பும் பெருகும்.திருமணமாகாத பெண்கள்,நல்ல கணவன் அமையவும் இப்படி செய்யலாம்
• நீண்ட கால நோய்களுக்கு பரிகாரம், மரண பயத்திற்கு பரிகாரம், மற்றும் ரகசிய ஒப்பந்தங்களில் ஈடுபட, கேட்டை நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கலாம்.
• எதிரிகளை வெற்றி கொள்ள, ஏவல், பேய், பில்லி சூனியன்களில் இருந்து விடுபட பரிகாரங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் செய்ய உடனடி பலன் உண்டு.
• அரசியலில் வெற்றி அடைய, அரசு வேலைகளில் உயர் பதவி அடைய திருவண்ணாமலையரை தொடர்ந்து 3 மாத காலம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்
• சித்திரை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருக பெருமானையும் வள்ளியையும் வழிபட காதல்... கல்யாணமாகும்...
• ஆனால் சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கடன்,பொன்,பொருள் எதுவும் கொடுக்க கூடாது. கொடுத்தால் திரும்பி வராது.
இவை அனைத்தும் நம்பிக்கையே ..நம்பினார் கெடுவதில்லை என்று அவனை நம்பி எந்த நல்ல காரியத்திலும் இறங்குவோம் ...நன்றி ...

Comments

Popular posts from this blog

புலிக்கால் முனிவர்

சித்த மருத்துவ அடிப்படைகள்:-

மதுரை மீனாஷி அம்மன் கோயில்