இரத்த சோகை போக்க...! உடல் பருமனை குறைக்கும் தக்காளி...!
இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும் , இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் உடலில் இருந்தாலும் அவற்றை வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காளிச் சாறு. நன்கு பழுத்த தக்காளிப் பழத்தை சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும். பழுத்த பழத்தில்தான் நோய்த் தடுப்பு வைட்டமின் ‘ சி ’ அதிகமாய் இருக்கிறது. சிறு நீர் எரிச்சல் , மேக நோய் , உடலில் வீக்கம் , உடல் பருமன் , நீரிழிவு , குடல் கோளாறுகள் , கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது. மேலும் இந்த வித நோய் உள்ளவர்கள் 5,6 பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் சாறாக மாற்றி அருந்தினால் போதும், நாக்கு வறட்சியும் அகலும், உடலும் மினுமினுப்பாய் இருக்கும். மேலும் 100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும் கலோரி 20 தான். எனவே எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது. பழத்தில் கால்சியம் , பாஸ்பரஸ் , வைட்டமின் ‘ சி ’, வைட்டமின் ‘ ஏ ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்குச் சத்துணவும் கிடைக்கும். உ