கறிவேப்பிலையைக் கொண்டு உடல்நல பிரச்சனைகளுக்குத் தீர்வு

அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. பலரும் கறிவேப்பிலை வெறும் சுவை மற்றும் மணத்திற்காகத் தான் சேர்க்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் அது தவறு. கறிவேப்பிலையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக தூக்கி எறியும் அந்த இலையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் சத்துக்கள் உள்ளது உங்களுக்கு அன்றாடம் உடலுக்கு வேண்டிய சத்துக்களைப் பெற வேண்டுமானால், உணவில் சேர் க்கும் கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தாலே போதும். ஏனெனில் கறிவேப்பிலையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் வைட்டமின்களான ஏ, ஈ, சி மற்றும் பி போன்றவை நிறைந்துள்ளது. பலருக்கும் கறிவேப்பிலை சாப்பிட்டால் முடி வளரும் என்று தான் தெரியும். ஆனால் கறிவேப்பிலையைக் கொண்டு பல பெரிய பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காணலாம். அசிடிட்டி :- அசிடிட்டி பிரச்சனை இருந்தால், கறிவேப்பிலை சாற்றினைப் பருக அசிடிட்டி மற்றும் செரிமான பிரச்சனைகள் தீரும். அதற்கு கறிவேப்பிலையை ஜூஸ் போட்டு குடிக்க வேண்டிய அவசியமில்லை. தினமும் அதனை சிறிது வாயில் போட்டு மென்று சாப்பிட்டாலே போதும். வயிற்று உப்ப...